பிரதமரை எதிர்த்து 111 விவசாயிகள் போட்டி

578

தமிழ்நாட்டு விவசாயிகளின் வங்கிக்கடன்களை தள்ளுபடி செய்ய மத்திய அரசை வலியுறுத்தி கடந்த 2017-ம் ஆண்டில் அய்யாக்கண்னு தலைமையில் தமிழக விவசாயிகள் டெல்லியில் 100 நாள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 2018-ம் பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின்போது மீண்டும் போராட்டம் நடத்தினர். ஆனால், தமிழக விவசாயிகளின் குரலுக்கு மத்திய அரசு செவிசாய்க்கவில்லை.

பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக நேற்றிரவு பாஜக தலைமை வெளியிட்ட முதல் பட்டியலில் பிரதமர் நரேந்திர மோடி உத்தரபிரதேசம் மாநிலத்தில் உள்ள வாரணாசி தொகுதியில் மீண்டும் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், வாரணாசி பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடியை எதிர்த்து விவசாய சங்கத் தலைவர் அய்யாக்கண்னு தலைமையில் 111 விவசாயிகள் வேட்புமனு தாக்கல் செய்ய தீர்மானித்துள்ளனர்.

இதுதொடர்பாக, செய்தியாளர்களுக்கு இன்று பேட்டியளித்த அய்யாக்கண்ணு, தமிழ்நாட்டில் இருந்து சுமார் 300 விவசாயிகள் விரைவில் வாரணாசிக்கு சென்று நான் மற்றும் மேலும் 110 விவசாயிகள் மோடியை எதிர்த்து வேட்புமனு தாக்கல் செய்வோம் என தெரிவித்துள்ளார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of