112-ஐ அழுத்தினால் எல்லாமே கிடைக்குமாம்! உங்களுக்கு தெரியுமா???

609

தற்போது, அவசர போலீஸ் உதவிக்கு ‘100’ என்றும், தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிக்கு ‘101’ என்றும், ஆம்புலன்சுக்கு ‘108’ என்றும், பெண்கள் பாதுகாப்புக்கு ‘1090’ என்றும் தனித்தனி அவசர உதவி எண்கள் உள்ளன.

இவை எல்லாவற்றையும் ஒருங்கிணைத்து, தேசிய அளவில் ‘112’ என்ற ஒரே உதவி எண் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. அமெரிக்காவில் எல்லா அவசர உதவிக்கும் ‘911’ என்ற ஒரே எண் இருப்பதுபோல், இந்தியாவில் இதை மத்திய உள்துறை அமைச்சகம் அறிமுகம் செய்துள்ளது.

இந்த திட்டம், இமாசலபிரதேசம், நாகாலாந்து ஆகிய மாநிலங்களில் ஏற்கனவே அமலுக்கு வந்து விட்டது.

இந்நிலையில், தமிழநாடு, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், ராஜஸ்தான், மத்தியபிரதேசம் உள்ளிட்ட 14 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள், வருகிற 19-ந்தேதி இத்திட்டத்தில் இணைகின்றன.

இந்த எண் மூலம் உதவி பெறுவதற்கு, தொலைபேசியில் ‘112’ எண்ணை அழுத்தலாம் அல்லது ஸ்மார்ட் போனில் உள்ள எச்சரிக்கை பொத்தானை 3 தடவை விரைவாக அழுத்தினால், அவசர உதவி மையத்துக்கு அழைப்பு சென்று விடும்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of