116 பேர் பலி -கள்ளச்சாராயத்தால் நடந்த விபரீதம்

249
116 people death by drinking alcohol

உத்திர பிரதேச மாநிலம் சகரன்பூர் மாவட்டத்தில் உள்ள கிராமத்தினர் சிலர், அண்டை மாநிலமான உத்திரகாண்டிற்கு இறுதிசடங்கில் கலந்து கொள்ள சென்றுள்ளனர்.

அப்போது அவர்கள் கள்ளச்சாராயத்தை குடித்துள்ளனர். கள்ளச்சாராயம் குடித்ததன் காரணமாக உத்திர பிரதேசம்,உத்திரகாண்டு மாநிலத்தை சேர்ந்த 116 பேர் பலியாகி உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நிவாரணமாக 2 லட்சம் ரூபாயும், சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும் என்று  உத்திர பிரதேச அரசு அறிவித்துள்ளது. மேலும் இதுகுறித்து விசாரணை செய்ய 5 பேர் கொண்ட  சிறப்பு புலனாய்வு குழுவையும் அமைத்து உத்தரவிட்டுள்ளது.