இது வயிறா? காய்லாங்கடையா? வயிற்றில் இருந்து 116 ஆணிகள் நீக்கம்!

498

ராஜஸ்தானை சேர்ந்த போலா சங்கர் என்பவர், கடுமையான வயிற்றுவலி காரணமாக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவரை பரிசோதனை செய்து எக்ஸ்ரே எடுத்து பார்த்தபோது அவரது வயிற்றில் 100-க்கும் மேல் ஆணிகள் இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அந்த ஆணிகளை அறுவை சிகிச்சை மூலம் மருத்துவர்கள் அகற்றினர்.

43 வயதான அந்த நபர், உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டு மெல்லிய கம்பிகளை விழுங்கிதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

போலா சங்கரின் வயிற்றில் இருந்த 116 ஆணிகளால் அவரது வயிற்றில் சிறு சிராய்ப்பு கூட ஏற்படாதது மருத்துவர்கள் மத்தியில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of