11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரு ஹேப்பி நியூஸ்..! – தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு..!

633

11 மற்றும் 12 ஆம் வகுப்பிற்கான பாடத்திட்டத்தில் மாற்றம் கொண்டுவரப்பட்டு தமிழக அரசின் சார்பில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

தமிழக அரசு வெளியிட்டுள்ள இந்த அரசாணையில், 11 மற்றும் 12 ஆம் வகுப்பிற்கான தேர்வு கடந்த ஆண்டு முதல் 600 மதிப்பெண்ணிற்கு 6 பாடங்கள் வீதம் தேர்வு நடைபெற்று வந்தது.

இந்த தேர்வு முறையில் மாற்றம் கொண்டுவரப்பட்டு,இனி 500 மதிப்பெண்ணிற்கு தேர்வு நடத்தப்படும் என அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது, மருத்துவம் படிக்க விரும்பும் மாணவர்கள் கணிதம் பாடத்தை தவிர்த்து மற்ற பாடங்களான மொழிப்பாடம், ஆங்கிலம்,வேதியியல்,உயிரியியல்,இயற்பியல் ஆகிய பாடங்களை தேர்வு செய்து கொள்ளலாம்.

அதே போன்று பொறியியல் படிக்கவிரும்புவோர் உயிரியியல் பாடம் தவிர்த்து மேற்குறிப்பிட்ட பாடங்களோடு கணிதம் சேர்த்து படிக்கலாம். இந்த அரசாணை அடுத்த ஆண்டு (2020-21) முதல் நடைமுறைக்கு வரும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழக அரசின் இந்த அதிரடி மாற்றத்தால் மாணவர்களின் மன அழுத்தம் மற்றும் சுமை குறையும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

 

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of