24 வயது இளைஞருக்கு அடித்த ஜாக்பாட்.. 12கோடி பரிசு

3325

கேரளாவில் லாட்டரி சீட்டு விற்பனை அமோகமாக நடைபெற்று கொண்டு வருகிறது. ஆனால் தமிழ்நாட்டில் அதற்கு நிரந்தர தடை விதித்துள்ளனர்.

கேரளாவில் கோவில் ஊழியர் ஆன அனந்த் விஜயன் என்பவருக்கு லாட்டரியில் 12கோடி ரூபாய் பரிசு கிடைத்துள்ளது. இந்த பணத்தில் வருமான வரி மற்றும் கமிஷன் போக விஜயனுக்கு 7.50 கோடி கிடைக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இவர் கேரள மாநிலம் ஏர்ணாகுளத்தில் உள்ள ஏலம்குளம் கோவிலில் பணியாற்றி வருகிறார். இவருக்கு லாட்டரில் கிடைத்த பணத்தால் கோடீஸ்வரனாகவும் மாறிவிட்டார். இதனால் விஜன் மகிழ்ச்சியில் திளைத்து வருகிறார்.