மழை வெள்ளத்தில் 12 பேர் பலி

170
kandahar-3.3.19

ஆப்கானிஸ்தானில் உள்ள காந்தகார் என்னும் இடத்தில் கடந்த சில நாட்களாக கடும் மழை பெய்து வருகின்றது. கடந்த இரு நாட்களாக அங்கு வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டுள்ளது.

இந்த கடும் மழை மற்றும் வெள்ளப்பெருக்கில் சிக்கி இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் 1500கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்து உள்ளதாகவும் தெரியவருகிறது. தற்போது ஆப்கான் விணாமப்படை மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும்.

தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மக்களுக்கு உணவு வழங்கிவருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.