வெயில் அடித்த சதம்! 12 பேருக்கு நடந்த சோகம்!

276

ஆந்திராவில் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. பல மாவட்டங்களில் 110 டிகிரிக்கும் மேல் வெயில் கொளுத்துகிறது. அனல் காற்று வீசுவதால் மக்கள் வெளியே வர முடியாத சூழல் நிலவுகிறது.

வாகனங்களில் செல்வோர் கடும் அவதி அடைந்து வருகின்றனர். வெயில் கொடுமைக்கு மாநிலம் முழுவதும் 12 பேர் பலியாகி உள்ளனர். அதிகபட்சமாக கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் 6 பேர் உயிரிழந்தனர்.

விஜயநகரத்தில் 2 பேரும், விசாகப்பட்டினம், மேற்கு கோதாவரி, சித்தூர், கடப்பா மாவட்டங்களில் தலா ஒருவரும் பலியாகி உள்ளனர்.
மேலும் வெயிலால் பாதிக்கப்பட்ட 340 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of