12 வயது சிறுமியை கர்பமாக்கிய தந்தை?

309

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள பெத்தநாயக்கன்பட்டி கிராமத்தை சார்ந்த சிறுமி ஏழாம் வகுப்பு படித்து வருகிறார்.

சிறுமிக்கு தொடர்ந்து உடல் உபாதைகள் ஏற்பட்டதால் சிறுமியின் பெற்றோர் பழனி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளனர்.

மருத்துவர்கள் சிறுமியை பரிசோதனை செய்த நிலையில், அவர் ஆறுமாத கர்ப்பமாக இருப்பதை அறிந்து அதிர்ச்சியடைந்துள்ளனர். இதுகுறித்து மருத்துவமனை சார்பில் சார் ஆட்சியரிடம் புகார் அளிக்கப்பட்டது.

இதுதொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்த நிலையில், சிறுமியின் தாயின் இரண்டாவது கணவன் காமராஜன் தான் இந்த இரக்கமற்ற செயலுக்கு காரணம் என்பது தெரியவந்தது.

இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள அனைத்து மகளிர் காவல்நிலைய காவல்துறையினர், காமராஜை போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர்.