10 வயது சிறுமியை 4 மாத கர்ப்பமாக்கிய 12 வயது சிறுவன்..,

1533

மராட்டியில் பால்கார் மாவட்டம் மோகாடா உள்பட்ட கிராமத்தை சேர்ந்த 10 வயது சிறுமி வயிறு வலிப்பதாக பெற்றோர்களிடம் கூறியுள்ளார். பெற்றோர்கள் உடனடியாக சிறுமியை மருத்துவரிடம் அழைத்து சென்றனர். அப்போது மருத்துவர்கள் நடத்திய சோதனையில் திடுக்கிடும் தகவல் வெளியானது என்னவென்றால், அச்சிறுமி கர்ப்பமாகி உள்ளார் என தெரியவந்தது.இந்த அதிர்ச்சி தகவலறிந்த பெற்றோர் சிறுமியிடம் நடந்தது என்னவென்று விசாரித்தனர். அப்போது பக்கத்து வீட்டு 12 வயது சிறுவன் தன்னிடம் தவறாக நடந்து கொண்டது தெரியவந்தது. இதனையடுத்து அவர்கள் காவல் துறையில் புகார் கொடுத்தனர்.

இதனையடுத்து காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.