விரலின் வித்தையை பியானோவில் காட்டி உலகையே தன்வசமாக்கிய சென்னை சிறுவன்

860

திரையுலகில் பல ஜாம்பவான்கள் பல ஆண்டுகள் கஷ்டப்பட்டு ரசிகர்கள் மத்தியில் தனக்கென என்றும் அழியாத ஒரு இடத்தை பிடித்துள்ளனர். ஆனால், 12 வயது சென்னை சிறுவன் தன் பெயருடன் இசைக்கருவியை வைத்து இந்த உலகையை தன்னுடைய இசைக்கு அடிமையாக்கி, பல இசை ஜாம்பவான்களின் பாராட்டு மழையில் நினைந்தவர் “லிடியன் நாதஸ்வரம்”.இசைக்கு வயதில்லை என்பதை இவர் மீண்டும் நிறுபித்துள்ளார். இந்த வயதில் இப்படி பட்ட திறமையா என்று அனைவரையும் வாய் பிளக்க வைத்துள்ளார்.
அமெரிக்காவில் நடந்த

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் “தி வேர்ல்ட்ஸ் பெஸ்ட்” என்கிற இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிறுவன் லிடியன், தன்னுடைய விரல்களின் வித்தையை பியானோவில் காட்டி அனைவரையும் ஈர்த்தது மட்டுமிள்ளாமல், உலகளவிலும் தன்னை நிலை நிறுத்திக்கொண்டார்.

இந்நிகழ்ச்சியில், nikolai rimsky-korsakov-ன் “the flight of the bumblebee” என்கிற இசைக்குறிப்பை பியானோவில் வாசித்து அனைவரையும் ஆச்சர்யமடையச் செய்துள்ளார். விரல்களின் வேகம் இருந்தால் தான் இந்த இசையை வாசிக்கு முடியும் என்ற நிலையில் அந்த இசையை சராசரியாக மனிதர்கள் வாசிப்பதை விட இரண்டு மடங்கு வேகத்தில் வாசித்து உலக அரங்கையை அதிரவைத்தார்.

முதலில் சாதாரண வேகத்தில் வாசித்த லிடியன் திடீரென இதை விட அதிவேகமாக வாசிக்க முடியும் என்று, நிமிடத்துக்கு 208 பீட்ஸில் அந்த இசையை வாசித்தார். இது அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது மட்டுமில்லாமல் ஆச்சரியமடைய செய்தது.

இதோடுமட்டுமில்லாமல் அணைவரையும் வியப்பின் உச்சத்திற்கு கொண்டு செல்லவேண்டும் என்பதற்காக நிமிடத்துக்கு 325 பீட்ஸில் இசையை வாசித்து அரங்கத்தில் இருந்த அனைவரையும் திக்கு முக்காடச் செய்தார். அரங்கத்தில் இருந்தவர்கள் அனைவரும் எழுந்து வாழ்த்து மழையை பொழுயத்தொடங்கினர். அதே நேரத்தில் அவரின் தந்தை ஆனந்தத்தின் உச்சத்தில் கண்கலங்கி நின்றார்.

இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி அனைவரின் கவனத்தை மேலும் ஈர்த்தது. இந்த வீடியோவை பார்த்த இசைப்புயல் ஏ.ஆர் ரஹ்மான் இதனை மற்றவருக்கு பகிர்ந்து லிடியனைப் பாராட்டியும் உள்ளார்.

இவரைத்தொடர்ந்து, ஜேம்ஸ் வசந்த், அனிருத் போன்ற தமிழ்த் திரையுலகப் பிரபலங்களும் சிறுவனுக்கு தங்களது பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துவருகின்றனர்.

ரஹ்மானின் பாராட்டுக்கு நன்றி தெரிவித்த லிடியன் டுவிட்டரில் கூறியது,

“நன்றி அங்கிள், எனக்கு எப்போதும் உங்கள் இசை பிடிக்கும், நேரில் உங்களிடம் வாழ்த்து பெறவும் என்னுடைய ஸ்டீன்வே பியானோவில் வாசிக்கவும் ஆவலாக உள்ளேன். என்னுடைய பியானோ உங்களுக்காகக் காத்திருக்கிறது அங்கிள்” என தெரிவித்தான்