சிரியாவில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் துருக்கி ஆதரவு கிளர்ச்சி படையை சேர்ந்த 120 பேர் பலி

434

சிரியாவில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் துருக்கி ஆதரவு கிளர்ச்சி படையை சேர்ந்த 120 பேர் பலியாகியுள்ளனர்.

சிரியாவில் அதிபர் பஷார் அல் ஆசாத் எதிராக அரசுக்கு எதிராக ஐ.எஸ். தீவிரவாதிகள் உள்நாட்டு போரில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை ஒழிக்க சிரிய அரசுக்கு ஆதரவாக ரஷ்ய படை போரில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுடன் துருக்கி அதரவு பெற்ற படைகளும் போரில் இறங்கியுள்ளன.

இந்நிலையில், கடந்த 5 நாட்களாக, அல் கொய்தா தீவிரவாத இயக்கத்துடன் தொடர்புடைய ஹயத் தஹ்ரீர் அல் ஷாம் என்ற அமைப்பினருக்கும், துருக்கி ஆதரவு பெற்ற கிளர்ச்சி படையினருக்கும் இடையில் கடுமையான மோதல் நடந்து வந்தது. இந்த சண்டையில் கிளர்ச்சி படையை சேர்ந்த 120 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of