128 கோடி ரூபாய் மின்சார கட்டணம்..?? அதிர்ச்சியில் முதியவர்

943

மாதம் 700 ரூபாய் மின்கட்டணம் வரும் ஒருவரின் வீட்டிற்கு திடீரென128 கோடி ரூபாய் மின்சார கட்டணம் வந்தது முதியவரை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
உத்தரபிரதேசத்தின் ஹாப்பூர் நகரில் சாம்ரி கிராமத்தில் வசித்து வருபவர் ஷமீம்.

ஏழை குடும்பத்தை சேர்ந்த இவரின் வீட்டிற்கு 500 ரூபாய் முதல் 700 ரூபாய் வரை மட்டுமே இதுவரை மின்கட்டண பில் வந்ததுள்ளது. இந்நிலையில் நேற்று அவரது வீட்டிற்கு வந்த மின்சார கட்டணத்தை கண்டு அந்த முதியவர் அதிர்ச்சி அடைந்தார்.

அவரின் வீட்டிற்கு வந்த பில்லி, 128 கோடியே 45 லட்சத்து 95 ஆயிரத்து 144 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அந்த கட்டணத்தை செலுத்த தவறிய நிலையில், அவரின் வீட்டுக்கு வழங்கிய மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

இதனால் செய்வதறியாது திணறிய அந்த முதியவர் மின்துறையிடம் முறையிட்டுள்ளார்.

Advertisement