12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் தேதி அறிவிப்பு

933

12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை மறுதினம் காலை 9.30 மணிக்கு இணையதளத்தில் வெளியிடப்படும் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் கடந்த மார்ச் 3 ஆம் தேதி தொடங்கி நடைபெற்றது.

மொத்தம் 8,97,992 பள்ளி மாணவ, மாணவிகளும், 47 சிறை கைதிகளும் இந்த தேர்வினை எழுதினர்.

இந்த நிலையில் நாளை மறுதினம்(19/04/19) தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளது.

 www. tnresults.nic.in,  www. dge1.tn.nic.in, www. dge2.tn.nic.in ஆகிய இணையதளங்களில் மாணவர்கள் தங்களின் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தேர்வு முடிவுகள் மாணவர்களின் செல்போன் எண்ணுக்கும் எஸ்.எம்.எஸ். மூலம் அனுப்பப்படும் என கூறப்பட்டுள்ளது.

மேலும், விடைத்தாள் நகல், மதிப்பெண் மறுக்கூட்டலுக்கு ஏப்ரல் 22 ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும் அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

 

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of