மெடிக்கல் ஷாப் மாத்திரை எமனாகிய கதை? ரத்த வாந்தி எடுத்து மாணவன் பலி!

1646

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே உள்ள அண்ணாநகர் பகுதியை சேர்ந்த சிவக்குமார் மகன், ஹரிகரண் 12 ஆம் வகுப்பு படித்து வருகிறார். ஹரி நேற்று வகுப்பறையில் கடும் வயிற்று வலியால் அவதிப்பட, நண்பர்கள் அருகில் இருந்த மெடிக்கல் ஷாப்பில் ஏதோ ஒரு மாத்திரையை வாங்கிக் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

மாத்திரையை சாப்பிட்ட பின்னர் வீட்டுக்கு சென்ற ஹரி, தொடர்ந்து வாந்தி எடுத்ததுடன், மயங்கியதால், உடனடியாக ஆரணி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர்.

இந்நிலையில், நள்ளிரவில் இரத்த வாந்தி எடுத்த ஹரி காலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து பேசிய அவரது தாயார், தவறான மாத்திரை மெடிக்கல் ஷாப்பில் கொடுக்கப்பட்டது தான் என் மகன் இறப்பிற்கு காரணம் என்று தெரிவித்தார்.

மருத்துவர்களின் ஆலோசனையின்றி மெடிக்கல் ஷாப்பில் மருந்துகளை வாங்க கூடாது என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். ஹரியின் உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதன் விவரம் வெளியானவுடன் தான் மாணவனின் இறப்பிற்கான உண்மை காரணம் தெரியவரும்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of