தோழிக்கு கல்யாணம் பண்ணி வச்ச 12-ஆம் வகுப்பு மாணவி.. பிறகு நேர்ந்த விபரீதம்..!

2605

கள்ளக்குறிச்சி அருகே எஸ்.ஒகையூர் கிராமத்தைச் சேர்ந்த தம்பதி ராஜமாணிக்கம் – கருப்பாயி. இவர்களது மகள் அன்பு. அந்த ஊர் அரசு மேல் நிலைப் பள்ளியில் 12-ம் வகுப்புப் படித்து வந்தாள்.

படிப்பு கூட முடியாத நிலையில், இந்த சிறுமிக்கு, போன 5 மாசத்துக்கு முன்பு ஜெகதீசன் என்பவருடன் பெற்றோர் கல்யாணம் செய்து வைத்தனர். இந்த கல்யாணத்தில் அன்புக்கு கொஞ்சமும் நாட்டம் இல்லை.. கட்டாயப்படுத்திதான் கல்யாணம் செய்தனர்.

ஆனால் ஒரே வாரத்தில், ஜெகதீசன் வேலைவிஷயமாக ஃபாரீன் சென்று விட்டார். அதனால் அம்மா வீட்டிலேயே வந்து விட்ட அன்பு, தொடர்ந்து ஸ்கூல் சென்றார். கழுத்தில் தாலியுடன் ஸ்கூல் சென்று வந்த அன்புக்கு நிறைய கேலி, கிண்டல் பேச்சுக்கள் விழுந்தது போல தெரிகிறது.

இந்நிலையில், அன்பு திடீரென வாயில் நுரை தள்ளி விழுந்து கிடக்கவும், பதறி அடித்து கொண்டு பெற்றோர் ஆஸ்பத்திரிக்கு தூக்கி சென்றனர். ஆனாலும் அன்பு உயிர் பாதியிலேயே போய்விட்டது. இதையடுத்து, வரஞசரம் போலீசார் விசாரிக்க ஆரம்பித்தனர். அப்போதுதான் முழு விவரம் வெளிவர தொடங்கியது.

அன்புக்கு ஒரு தோழி.. பள்ளியில் ஒன்றாக படிக்கிறார்கள்.. பக்கத்து பக்கத்து வீடும் கூட.. அதனால் ஆழமான நட்பு இவர்களுடையது. இந்த தோழியும் தீனா என்ற இளைஞரும் காதலித்துள்ளனர்.

இந்த காதல் அவரவர் வீட்டில் தெரியவரவும், எதிர்ப்பு கிளம்பியது. இறுதியில் காதலர்கள் வீட்டை விட்டு ஓடிப்போய் கல்யாணம் செய்வது என முடிவாகி, கடைசியில் அன்புவின் உதவியை தோழி கேட்க.. “நான் இருக்கேன்.. கவலைப்படாதே” என்று ஆறுதலை சொல்லி உள்ளார் அன்பு.

பின்னர், போன செவ்வாய்கிழமை ஸ்கூல் முடிந்தவுடன், காதல்ஜோடி, அன்பு, மற்றும் வேறு ஒரு தோழி என 4 பேர் சேர்ந்து கொண்டு, பைக்கில் கல்வராயன் மலையில் உள்ள வெள்ளிமலை கோயிலுக்கு போயுள்ளனர்.

அங்கு தோழிக்கு காதலனுடன் கல்யாணத்தை அன்புதான் நடத்தி வைத்துள்ளதாக தெரிகிறது. தாலி கட்டியவுடன் அந்த ஜோடி எஸ்.ஆகிவிட, அன்பு வீட்டுக்கு லேட்டாக வந்து சேர்ந்தாள்.

அப்போதுதான், தோழியின் அப்பா அன்பு வீட்டுக்கு வந்து, “என் பொண்ணு உன்கூடதான் வந்திருக்கிறாள். ஆனா, இப்போ வீட்டுக்கு வரல. உண்மையை சொல்லலேன்னா, நான் போலீசுக்கு போக போறேன்” என்று மிரட்டி விட்டு சென்றார்.

இதையடுத்து அன்புக்கு நிலைகொள்ளவில்லை.. தவறு செய்துவிட்டோமோ என்று பயந்து பயந்து புரண்டு படுத்த அன்பு, கடைசியில் பூச்சிமருந்தை எடுத்து குடித்துவிட்டது விசாரணையில் தெரியவந்தது.

சக மாணவியின் காதலுக்கு உதவியதால் தற்கொலை செய்துக் கொண்ட பரிதாப சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது