கட்டுப்பாட்டை இழந்த பேருந்து – 13 பேர் பலியான சோகம் | Pakistan

153

பாகிஸ்தானில் சிந்து மாகாணத்தில், மத்தியாரி என்ற மாவட்ட நெடுஞ்சாலையில் சென்ற ஒரு பேருந்து திடீரென கட்டுப்பாட்டை இழந்தது. அப்போது எதிரே வந்த வாகனத்தின் மீது அதிவேகம் மோதியது. இந்த விபத்தில் 13 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 3 பேர் பலத்த காயமடைந்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். இறந்தவர்கள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.

விபத்து குறித்து அறிந்த சிந்து மாகாண மந்திரி சயீத் கானி, இறந்தவர்களுக்கு தனது இரங்கலை தெரிவித்தார். மேலும் விபத்து குறித்து விசாரணை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார்.