எலிமருந்து கலந்த எள் உருண்டை..! 13 மாணவர்கள் மயக்கம்..!

517

தருமபுரி அருகே எலிமருந்து கலந்த எள் உருண்டை சாப்பிட்ட 13 மாணவர்களுக்கு மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தருமபுரி மாவட்டம் பேகாரஹள்ளியில் ஆறுமகம் என்ற விவசாயி வயல்களை நாசம் செய்யும் எலிகளை சாகடிக்க எள் உருண்டையில் எலி மருந்து கலந்து தனது வாகனத்தின் பையில் வைத்திருந்தார்.

அவர் வைத்திருந்திருந்த எள்ளுருண்டையை அவரது மகன் பழனிச்சாமி வீட்டிலிருந்து எடுத்து வந்து அவனுடன் படிக்கும் சக மாணவர்களுக்கு வழங்கியுள்ளார். அதை சாப்பிட்ட 13 மாணவர்கள் உடல்நிலை பாதிக்கப்பட்டு பலர் அங்கேயே மயக்கம் அடைந்தும் வாந்தி எடுத்துள்ளனர்.

இதனை கண்ட அப்பகுதி மக்கள் மாணவர்களை பேகாரஅள்ளி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்கு அனுமதித்து பின்னர் மேல்சிகிச்சைக்காக  தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அவர்களுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.