ஓரின சேர்க்கை.. ஆசைக்கு இணங்க மறுத்த சிறுவன்.. கொலை செய்த கொடூரம்..

2523

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள நொச்சிக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவருடைய மகன் தேவன் ராஜிற்கு 13 வயதாகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு, சிறுவன் காணாமல் போன நிலையில், பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.

அதன்பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார், விசாரணை மேற்கொண்டனர். அதில், அபினேஷ் என்ற இளைஞர், சிறுவன் தேவன் ராஜை ஓரின சேர்க்கைக்கு வற்புறுத்தியதாகவும், அதற்கு சிறுவன் மறுப்பு தெரிவித்ததால், அவனை கொலை செய்ததாகவும் தெரியவந்தது.

மேலும், இருவரின் பெற்றோர்களுக்கும் முன்விரோதம் இருந்ததும், இந்த கொலைக்கு காரணம் என்று கூறப்படுகிறது.

பின்னர், 13 வயது சிறுவனின் உடலை மீட்ட போலீசார், உடற்கூறாய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து, அபினேஷை கைது செய்த போலீசார், சிறையில் அடைத்தனர்.

Advertisement