தாயின் கள்ளக்காதலால் 13 வயது மகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம்

718

திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் தாயின் கள்ளக்காதலால்13 வயது மகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆவடி அடுத்த கோவில்பதாகையை சேர்ந்தவர் விமலா. அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள தனியார் கார்மென்ட்சில் பணியாற்றி வருகிறார். இவருக்கு13 வயதில் ஒரு மகளும்,10 வயதில் ஒரு மகனும் உள்ளனர்.

இந்நிலையில் விமலாவின் கணவர் கடந்த 8ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இதனை தொடர்ந்து அதே பகுதியை சேர்ந்த இன்பநேசன் என்பவருக்கும் விமலாவிற்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் நாளடைவில் விமாலவின்13 வயது மகளை ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்துள்ளான் இன்பநேசன். இதனால் கர்ப்பமடைந்த சிறுமியை, பூவிருந்தவல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அழைத்து சென்று கர்ப்பத்தை கலைத்துள்ளனர்.

இது குறித்து தகவலறிந்த சிறுமியின் தாத்தா முனுசாமி ஆவடி மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் இன்பநேசனை கைது செய்த போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

Advertisement