ரூ 15,000 கடனுக்காக 13 வயது சிறுமி அடமானம்..! அதிர்ச்சி சம்பவம்

940

திண்டுக்கல் மாவட்டம் சூலியம்பாறை அருகே உள்ள கவுண்டனுரைச் சேர்ந்த மூக்கம் இவரின் மனைவி அஞ்சலகம் இவர்களின் மகன் சரவண குமார்(23) இவர்களிடம் கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த தம்பதி ரூ.15,000 கடன் வாங்கியிருந்தார்.

இவர்களுக்கு 13 வயதில் ஒரு மகள் உள்ளார். இவர்கள் அன்றாட கூலி வேலை பார்த்து குடும்பம் நடத்தி வருவதால் பெற்ற கடனை திரும்பி தர முடியவில்லை. இதானல் கடன் கொடுத்த மூக்கன் மற்றும் அவரது மனைவி அஞ்சலகம் இருவரும் கடன் கொடுத்த தம்பதியினரிடம் தாங்கள் கொடுத்த கடனை அவர்கள் தரமுடியவில்லை என்றால் உங்கள் மகளை (13) எனது மகன் சரவணன்(23)க்கு திருமணம் செய்துவைக்க வேண்டும் என்றார்.

அதற்கு சிறுமியின் குடும்பத்தினாரும் வறுமையின் காரணமாக சம்மதம் தெரிவித்துள்ளனர். அதன்படி இருவீட்டாரும் பேசி சூலியம்பாறையில் உள்ள ஒரு கோயில் வைத்து சரவணகுமாருக்கும் 13 வயது சிறுமிக்கும் கட்டாயப்படுத்தி திருமணம் செய்துவைத்தனர்.

பின்பு சில மாதங்களாக அந்த சிறுமியுடன் குடும்பம் நடத்தி வந்தார். ஆனால் அந்த சிறுமிக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லாத காரணத்தால் தனக்கு நடந்த திருமணம் குறித்து குழந்தைகள் நல உதவி மையத்துக்கு தகவல் கொடுத்தார்.

அதன்பேரில் கரூர் மாவட்ட காவல் துறை காண்காணிப்பாளர் அந்த சிறுமிக்கு திருமணம் நடத்தி வைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுத்தனர். இதனையடுத்து குளித்தலை அனைத்து காவல்நிலைய ஆய்வாளர் இது குறித்து வழக்கம் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

அதனை தொடர்ந்து போக்ஸோ சட்டத்தின் கீழ் சரவணகுமாரையும் திருமண தடுப்புச் சட்டப்பிரிவின் கீழ் இருவீட்டாரின் பெற்றோர்களை போலீஸார் கைது செய்தனர். இவர்கள் 5 பேரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

மருத்துவ பரிசோதனைக்குப் பிறகு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார் அந்த சிறுமி