13 வயது சிறுமிக்கு பிறந்த ஆண் குழந்தை – திருப்பூரில் பரபரப்பு!

1537

பீகாரை சேர்ந்த 13 வயது சிறுமியின் பெற்றோர் திருப்பூரில் பனியன் கம்பெனியில் பணியாற்றி வருகின்றனர்.

பெற்றோர் வேலைக்கு சென்ற நேரத்தில், ஒடிசாவை சேர்ந்த அஜித் க்ரஷல் என்ற இளைஞர் சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி அடிக்கடி உல்லாசமாக இருந்துள்ளார்.

ஒரு கட்டத்தில் சிறுமிக்கு வயிற்று வலி ஏற்பட்டதைத் தொடர்ந்து, அவளை பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அப்போது சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது.

அதனையடுத்து, சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், போலீசார், இளைஞர் அஜித் க்ரஷல் மீது போக்சோ பிரிவின் கீழ் வழக்குப் பதிவு அவரை தேடி வருகின்றனர். இந்நிலையில், சிறுமிக்கு திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனையில் இன்று ஆண் குழந்தை பிறந்துள்ளது.