சென்னையில் தந்தையின் கண் முன்னே உயிரிழந்த மகள்..!

110

சென்னை, அனகாபுத்தூர் குருசாமி நகரை சேர்ந்தவர் ஆலியா(13) சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தானியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார்

இந்நிலையில் இன்று தன் அப்பா அம்ஜித்(49) உடன் பள்ளிக்கு சென்றுக்கொண்டிருத்தான்.

சிற்றுந்தை முந்த நினைக்கும்போது போது, வாகனத்தை ஓட்டிக் கொண்டு வந்த அம்ஜித் நிலை தடுமாறி, முன்னால் சென்றுக்கொண்டிருந்த சிற்றுந்தின் முன் விழுந்தார்.

எதிர்பாராத இந்த விபத்தில் பஸ்சின் முன்பகுதியில் சிக்கிய அலியா மீது பேருந்தின் சக்கரங்கள் ஏறியதில், சிறுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

பேருந்தை ஓட்டிச் சென்ற ஓட்டுநர் சம்பவ இடத்தை விட்டு தப்பி ஓடிச் சென்றார்.

இதைத்தொடர்ந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல் நிலைய அதிகாரிகள் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து பேருந்து ஓட்டுநரை  தேடி வருகின்றனர்.