14வது IPL கிரிக்கெட் தொடர் இன்று தொடக்கம்

1117

8 அணிகள் பங்கேற்கும் 14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இன்று தொடங்குகிறது. சென்னையில் இன்று நடைபெறும் முதல் போட்டியில், மும்பை – பெங்களூரு அணிகள் மோத உள்ளன.

பெருந்தொற்று காரணமாக கடந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தபட்ட ஐ.பி.எல் தொடர் நடப்பாண்டில் உள்நாட்டிலேயே நடத்தப்படுகிறது.

சென்னை, பெங்களூரு, கொல்கத்தா, மும்பை, டெல்லி, அகமதாபாத் ஆகிய ஆறு மைதனாங்களில் போட்டியை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த வருடமும் பார்வையாளர்கள் இன்றி போட்டிகள் நடைபெறும் என்று பி.சி.சி.ஐ. அறிவித்துள்ளது.

அதன்படி சென்னையில் இன்று நடைபெறும் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணியுடன், விராட் கோலி தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி மோதுகிறது.

இந்த போட்டி இன்று இரவு 7:30 மணிக்கு தொடங்குகிறது. இரு அணிகளும் பலம் பொருந்திய அணிகள் என்பதால், ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இதைதொடர்ந்து நாளை மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி அணிகள் மோத உள்ளன.

Advertisement