உத்தரக்காண்ட் மாநிலத்தில் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 14 பேர் உயிரிழப்பு

310

உத்தரக்காண்ட் மாநிலத்தில் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில்14 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

உத்தரகாசியில் உள்ள விகாஸ் நகர் பகுதியை நோக்கி தனியார் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. பேருந்து டாம்டா பகுதி அருகில் உள்ள பள்ளத்தாக்கு அருகே சென்றபோது திடீரென பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

தகவலறிந்து வந்த மீட்புக் குழுவினர் பேருந்தில் இருந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில்14 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயரிழந்தார்.

மேலும்,13 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்தில் படுகாயம் அடைந்தவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும், மீட்புப் பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அம்மாநில முதலமைச்சர் திரிவேந்திர சிங் ராவத் உத்தரவிட்டுள்ளார்.