சென்னை டாஸ்மாக் கடையில் 14 லட்சம் கொள்ளை..!

234

சென்னை மயிலாப்பூர் ஆர்.கே.மடம் சாலையில் உள்ள பல்லக்கு நகரில் டாஸ்மாக் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு நேற்று மதியம் 12 மணிக்கு கண்காணிப்பாளர் சங்கர் கணேஷ் மற்றும் ஊழியர் ராஜபாண்டி ஆகியோர் வந்து கடையை திறந்துள்ளனர்.


கடைக்குள் சென்று பார்த்தவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. காரணம் கடையின் கல்லாப்பெட்டியை உடைத்து ரூ 14.70 லட்சம் பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றிருந்தனர்.

கடையின் பூட்டு பூட்டிய படி இருக்கையில் அவர்கள் பின்பக்கம் வந்து கல்லா பெட்டியிலிருந்த பணத்தை திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து மயிலாப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

உடனே மயிலாப்பூர் போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, கடை முழுவதும் பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர். பின்னர் அங்குள்ள சிசிடிவி கேமிராக்களையும் ஆய்வு செய்த போலீசார் கொள்ளையர்களைத் தேடி வருகின்றனர்.

இந்த சம்பவத்தால் அங்கு மதுவிற்பனை நடைபெறவில்லை. இதனால் குடிமகன்கள் சோகமாகக் கடையைப் பார்த்த படியே நின்று விட்டு வேறு கடையை நோக்கி நடையை கட்டினர்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of