குழந்தைக்கு கொடூர நோய்.. சிகிச்சைக்கு ரூ.16 கோடி தேவை.. திடீரென அடித்த அதிர்ஷ்டம்..

581

கர்நாடக மாநிலம் பட்கல் பகுதியை சேர்ந்தவர்கள் முகமது பாசில் மற்றும் காதிஜா தம்பதியினர். இந்த தம்பதிக்கு பிறந்த பாத்திமா என்ற 14 மாத குழந்தைக்கு, முதுகெழும்பில் மரபணு சார்ந்த பிரச்சனை இருந்துள்ளது.

இதனை சரி செய்வதற்கு, 16 கோடி ரூபாய் செலவாகும் என்று மருத்துவர்கள் கூறியதால், குடும்பமே சோகத்தில் மூழ்கியிருந்தது.

இதுகுறித்து அறிந்த மருந்து தயாரிப்பு நிறுவனம் ஒன்று, அந்த சிகிச்சைக்கு தேவைப்படும் பணத்தை, லக்கி லாட்டரி வின்னர் என்ற பெயரில், குழந்தைக்கு வழங்கியது.

இதையடுத்து, சிகிச்சை முடிந்த நிலையில், குழந்தை நல்ல நிலைக்கு திரும்பியுள்ளது. இதுகுறித்து பேசிய பெற்றோர், குழந்தையின் உடலில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. தற்போது தனது கால்களை குழந்தை அசைக்கிறது என்று தெரிவித்துள்ளனர்.

Advertisement