ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 14 ஆக உயர்வு

732

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட கோரி கடந்த மே மாதம் 22 ஆம் தேதி பொதுமக்கள் ஆட்சியர் அலுவலகம் நோக்கி பேரணியாக சென்றனர். அப்போது வெடித்த கலவரத்தை தொடர்ந்து போலீசார் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

இதில் 13 பேர் பலியாகினர். மேலும் போலீசார் துப்பாக்கிச் சூடு, தடியடியில் படுகாயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இதில் கோமா நிலையில் 5 மாதங்களாக சிகிச்சை பெற்று வந்த கீழமுடிமண் கிராமத்தை சேர்ந்த ஜஸ்டின் என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது.

Advertisement