14 வயதில் குழந்தைக்கு தாயா? அதிர்ச்சியில் குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பு!

426

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பகுதியில் வசித்து வந்த 13 வயது சிறுமிக்கு கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தனது உறவினருடன் திருமணம் நடைபெற்றுள்ளது.

இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை அன்று திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனையில் சிறுமிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனையடுத்து 14 வயதேயான சிறுமிக்கு குழந்தை பிறந்துள்ளதாக குழந்தை பாதுகாப்பு அமைப்பினருக்கு மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து இன்று குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பைச் சேர்ந்த அலுவலர் நேரில் வந்து சிறுமியையும் குழந்தையையும் பார்வையிட்டனர்.

ஒரு குழந்தைக்கே குழந்தை பிறந்துள்ளதால், அதனை வளர்க்க சிறுமி உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் தகுதியானவரா என ஆய்வு மேற்கொள்ளப்படும் என்றும் தகுதியற்றவர் என தெரியும் பட்சத்தில் குழந்தை அங்கீகரிக்கப்பட்ட காப்பகத்தில் சேர்க்கப்படும் என்றும் கூறினர்.

மேலும் சிறுமிக்கு மறுவாழ்வு அளிக்கப்படும் என்றும் குழந்தை திருமணத்திற்கு உடந்தையாக இருந்தவர்களுக்கு தண்டனை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of