வாட்டும் வெப்பம் ! 1435 பேர் உயிரிழப்பு | France | 1435 Died

225

கடந்த சில நாட்களாக பிரான்ஸ் நாட்டில் கடுமையான வெப்பம் நிலவுவதோடு வெப்பக்காற்றும் வீசி வருகின்றது. அங்கு முன்னெப்போதும் இல்லாத வகையில் 46 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.

இதன்காரணமாக பிரான்சில் பல முறை சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளிகள் மூடப்பட்டதுடன், பொது நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டன.

இந்த நிலையில், பிரான்சில் கோடை வெயிலுக்கு 1,435 பேர் பலியானதாக தற்போது அதிகாரப்பூர்வ தகவல் வெளியிடப்பட்டு உள்ளது. ரேடியோ ஒன்றுக்கு அளித்த பேட்டியின் போது அந்நாட்டின் சுகாதாரத்துறை மந்திரி ஆக்னஸ் புசின் இந்த தகவலை கூறினார்.