ஜார்கண்டில் 1438 கிலோ ஓப்பியம் பறிமுதல்

307

இன்று வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த ஜார்கண்ட் போலீசார் குந்தி என்ற இடத்தின் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது அவ்வழியாக வந்த வாகனத்தை சோதனையிட்டனர்.

சோதனையில் அந்த வாகனத்தில் ராஞ்சியில் இருந்து கடத்தி வரப்பட்ட 1438 கிலோ ஓப்பியம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது, மேலும் 78 ஆயிரம் ரூபாய் ரொக்கமும் இருந்தது தெரியவந்தது.

போலீசார் விசாரணையில் ஏழு பேர் கொண்ட கும்பல் அந்த ஓபியத்தை ராஞ்சியில் இருந்து உத்தரபிரதேச மாநிலத்திற்கு கொண்டு சென்றதாக குறிப்பிட்டுள்ளனர். மேலும் NDPS எனப்படும் Narcotics Drugs and Psychotropic Substances என்பதின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு அந்த ஏழு நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.