ராமநாதபுரத்தில் 2 மாதத்திற்கு 144 தடை உத்தரவு..! காரணம் தெரியுமா..?

605

தாழ்த்தப்பட்ட மக்களுக்காக போரடிய தலைவர்களில் முக்கியமான ஒருவர் இமானுவேல் சேகரன். தனது வாழ்நாள் முழுவதும் தாழ்த்தப்பட்ட மக்களுக்காகவே வாழ்ந்த இமானுவேல், 1924-ஆம் ஆண்டு அக்டோபர் 9-ஆம் தேதி அன்று பிறந்து 1957-ஆம் ஆண்டு செப்டம்பர் 11-ஆம் அன்று படுகொலை செய்யப்பட்டார்.

இந்நிலையில் இமானுவேல் சேகரின் நினைவு தினம் மற்றும் முத்துராமலிங்க தேவர் குருபூஜை முன்னிட்டு 2 மாத காலத்திற்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதாவது செப்டம்பர் 8-ஆம் தேதி முதல் அக்டோபர் 31-ஆம் தேதி வரை இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதற்காக, மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பிரிவு 144 நடைமுறைப்படுப்பட்ட பகுதியில் ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் பொது இடத்தில் கூடுவது சட்ட விரோதமாக கருதப்படுகிறது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of