பெங்களூர் முழுவதும் 144 தடை..! தொடரும் பதற்றமான சூழல்..!

2089

கர்நாடகாவில் குமாரசாமி தலைமையிலான காங்கிரஸ்- மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணி ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த கட்சிகளின் 15 எம்.எல்.ஏ.க்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர்.

2 சுயேட்சைகளும் குமாரசாமிக்கு கொடுத்த ஆதரவை விலக்கிக் கொண்டுள்ளனர். இந்த நிலையில் பகுஜன் சமாஜ் கட்சியின் ஒரு எம்.எல்.ஏ. நடுநிலை வகிப்பதாக கூறியுள்ளார். 17 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவை இழந்ததால் குமாரசாமி தலைமையிலான கூட்டணி பலம் 101 ஆக குறைந்தது.

குமாரசாமி தலைமையிலான ஆட்சி பறிபோகும் நிலை ஏற்பட்ட நிலையில், இன்று சட்டசபை கூடியது. இந்நிலையில் இன்று சுயேட்சை எம்.எல்.ஏக்கள் வீட்டை மஜத, காங்கிரஸ் கட்சியினர் முற்றுகையிட்டதால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.

மேலும் குமாரசாமி ஆட்சி பறிபோகும் நிலை ஏற்பட அதிக வாய்ப்புகள் இருப்பதால், வன்முறை சம்பவங்கள் ஏற்படலாம் என 144 தடை உத்தரவை காவல்துறை பிறப்பித்துள்ளது. மதுபானக்கடைகளை மூடவும் காவல்துறை உத்தரவிட்டுள்ளது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of