சாலைகளில் சுற்றித்திரிந்தவர்களை அடித்து விரட்டிய போலீஸ்

815

விழுப்புரத்தில் ஊரடங்கு உத்தரவை மீறி இருசக்கர வாகனங்களில் சாலைகளில் சுற்றித்திரிந்தவர்களை போலீசார் அடித்து விரட்டினர்.

விழுப்புரம் நான்கு முனை சந்திப்பில் உள்ள மேற்கு காவல் நிலையம் எதிரே போக்குவரத்து காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தேவையின்றி சாலைகளில் சுற்றித்திரித்தவர்களை தடுத்து நிறுத்திய போலீசார், இருசக்கர வாகனங்களின் முகப்பு விளக்குகளை அடித்து உடைத்தனர்.

மேலும் இருசக்கர வாகனங்களில் வந்தவர்களை லத்தியால் தாக்கி எச்சரித்து அனுப்பி வைத்தனர். இனி ஊரடங்கு உத்தரவை மீறி வெளியே வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர்.

Advertisement