பிரேசில் நாட்டில் 5 நாளில் 147 கொலைகள்

168

பிரேசிலின் வடகிழக்கு பகுதியில் உள்ள சீரா மாகாணத்தை சேர்ந்த போலீசார் தங்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கடந்த 19-ந்தேதி முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் போலீசார் சிறை தண்டனையை எதிர்கொள்ள வேண்டும் என மாகாண நீதிமன்றம் தீர்ப்பளித்தது.மேலும் போராட்டத்தில் ஈடுபட்ட 200-க்கும் மேற்பட்ட போலீஸ் அதிகாரிகள் பணி நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.

இருப்பினும் போலீசார் போராட்டத்தை கைவிட மறுத்து, வேலை நிறுத்தத்தை தொடர்ந்து வருகின்றனர்.இதனிடையே போலீசாரின் வேலை நிறுத்த போராட்டத்தால் சீரா மாகாணத்தில் குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.

கடந்த 5 நாட்களில் மட்டும் 147 கொலைகள் நடந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, நிலைமையை கட்டுக்குள் கொண்டு வரும் விதமாக சீரா மாகாணம் முழுவதும் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டு உள்ளனர்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of