சென்னையில் 149 பேருக்கு கொரோனா – எந்தெந்த பகுதிகளில் எத்தனை பேர்?

434

சென்னையில் அதிகபட்சமாக ராயபுரம் மண்டலத்தில் 40 பேர் கொரோனா தொற்றால் அவதிப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், சென்னையில் மொத்தம் 149 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ராயபுரத்தில் 40 பேரும், திரு.வி.க.நகரில் 22 பேரும், கோடம்பாக்கத்தில் 19 பேரும், தண்டையார்பேட்டையில் 12 பேரும், தேனாம்பேட்டை மண்டலத்தில் 11 பேரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

மணலி, அம்பத்தூரில் இதுவரை யாருக்கு கொரோனா தொற்று ஏற்படவில்லை எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of