தருமபுரி மாவட்டம் சிட்லிங் மாணவி பலாத்கார வழக்கில் குற்றவாளிகளுக்கு 15 நாள் போலீஸ் காவல்

430

தருமபுரி மாவட்டம் சிட்லிங் மாணவி பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்ட இரண்டு இளைஞர்களை 15 நாள் போலீஸ் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

அரூர் அருகே சிட்லிங் கிராமத்தைச் சேர்ந்த பிளஸ் 2 மாணவியை கடந்த 5 ஆம் தேதி அதே பகுதியை சேர்ந்த சதிஷ், ராமேஷ் ஆகிய 2 இளைஞர்கள் பாலியல் பலாத்காரம் செய்தனர்.

உடல் நிலை பாதிக்கப்பட்ட மாணவி கடந்த 10 ஆம் தேதி தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார், இது தொடர்பாக சதீஷ், ராமேஷ் ஆகிய இருவரை காவல் துறையினர் கைது செய்து சேலம் சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் இவர்களுக்கு நீதிமன்ற காவல் முடிந்ததையடுத்து நேற்று மாலை தருமபுரி மகிளா நீதிமன்றத்தில் போலீசார் குற்றவாளிகளை ஆஜர் படுத்தி வழக்கு தொடர்பான ஆவணங்களையும் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர், பின்னர் குற்றவாளிகளை விசாரித்த மகிளா நீதிமன்ற நீதிபதி மேலும் குற்றவாளிகளை15 நாட்கள் காவலில் வைக்க உத்தரவிட்டார்.