ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு – கொரோனா தடுப்பு குறித்து முதல்வரின் 15 முக்கிய அறிவிப்பு

1675

கொரோனா வைரஸ் கட்டுப்படுத்துவது குறித்து தமிழக அரசு தற்போது பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. அதுதொடர்பான தகவல்கள் பின்வருமாறு:-

1. தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு ஏப்ரல் 14-ந்தேதி வரை நீட்டிக்கப்படுகிறது.

2. தனியார் வங்கிகள், சிறிய நிதி நிறுவனங்கள், சுய உதவிக்குழுக்கள் தினசரி, வார, மாத வட்டி வசூலை நிறுத்த வேண்டும்.

3. கிராமங்களில், தினசரி, வார, மாத வட்டியை வசூலிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

4. காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றை விற்கும் கடைகளை விசாலமான இடங்களில் அமைக்க வேண்டும்.

5. மளிகை கடைகளிலும், மருந்து கடைகளிலும் சமூக இடைவெளியை மக்கள் பின்பற்ற வேண்டும்.

6. கொரோனா நோய் கொடிய ஆட்கொல்லி நோய் என்பதை தண்டோரா மற்றும் ஒலிப்பெருக்கி மூலம் தெரிவிக்க வேண்டும்

7. அத்தியாவசிய பணிகளில் ஈடுபடும் கடைகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அடையாள அட்டை பெற வேண்டும்.

8. வேளான் விளை பொருட்களை சந்தைக்கு எடுத்துச் செல்லும் வாகனங்களுக்கு தடை கிடையாது.

9. கர்ப்பிணிகள், டயாலிசிஸ் சிகிச்சை பெறுவோர் 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்படுவர்.

10. தமிழகம் முழுவதும் வெளிநாடுகளில் இருந்து வந்த 54-ஆயிரம் பேர் வீடுகளை விட்டு வெளியே வரவில்லை என்பதை மாவட்ட ஆட்சியர்கள் உறுதி படுத்த வேண்டும்.

11. கொரோனா நோயாளிகளின் குடும்பத்தினர் எக்காரணம் கொண்டும் வீடுகளை விட்டு வெளியே வரக்கூடாது.

12. அத்தியாவசிய பணிகளில் ஈடுபடும் வாகனங்களின் உரிமையாளர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அடையாள அட்டை பெற வேண்டும்.

13. அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்யும் வகையில், மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் 9 குழுக்கள் செயல்படும்

14. அமேசான், ப்ளிப்கார்ட் உள்ளிட்ட ஆன்லைன் நிறுவனங்கள் மளிகை பொருட்களை டெலிவரி செய்வதற்கு தடை கிடையாது.

15. சமைக்கப்பட்ட உணவுகளை டெலிவரி செய்யும், ஸ்விக்கி, ஸொமோட்டோக்களுக்கான தடை தொடரும்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of