சண்டை கோழியை வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட15 பேர் கைது

428

விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே சண்டை கோழியை வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட15 பேர் கைது செய்யப்பட்டனர்.

உளுந்தூர்பேட்டை அருகே உள்ள மாதம்பட்டு கிராமத்தில் உள்ள வயல்வெளி பகுதிகளில் ஞாயிறு தோறும் சண்டை கோழிகளை வைத்து அதனை மோதவிட்டு சூதாட்டம் நடந்து வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த திருவெண்ணெய்நல்லூர் காவல்துறையினர் மாதம்பட்டு பகுதியில் உள்ள சண்டைக்கோழி களை வைத்து சூதாட்டம் நடத்தும் இடத்தை போலீசார் சுற்றி வளைத்தனர்.

காவர்களை கண்டதும் அங்கிருந்து தப்பிச் சென்ற கும்பலை போலீசார் விராட்டி சென்று பிடித்தனர். இதில் விழுப்புரம், கடலூர். புதுச்சேரி உட்பட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த15 பேர் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர்.

மேலும் பலர் தப்பி ஓடினர் அவர்களை காவல்துறையினர் தீவிரமாக தொடர்ந்து தேடி வருகின்றனர். இந்நிலையில் மாதம்பட்டு கிராமத்தில் சண்டை கோழிகளை வைத்து சூதாட்டம் நடந்த இடத்தில் நிறுத்தப்பட்டிருந்த15 இருசக்கர வாகனம் மற்றும் ஒரு ஆட்டோ என 8 லட்சம் ரூபாய் மதிப்பிலான வாகனங்கள் போலீசார் பறிமுதல் செய்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of