10ஆம் வகுப்பு மாணவர்கள் கண்ணீர் மல்க பேட்டி

724

புதுச்சேரியில் தனியார் பள்ளியின் நிர்வாக குளறுபடியால், 15க்கும் மேற்பட்ட 10ஆம் வகுப்பு மாணவர்கள் தோல்வியடைந்துள்ளதாக மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

புதுச்சேரி அரியாங்குப்பம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில், 2019-2020ஆம் கல்வி ஆண்டில் 19 மாணவர்கள் 10ஆம் வகுப்பு பயின்று வந்தனர்.

இந்த பள்ளி நிர்வாகம், தேர்வு எழுதும் மாணவர்களின் விவரங்களை கல்வித்துறைக்கு முறையாக அனுப்பவில்லை என கூறப்படுகிறது.

இதனால் மாணவர்களின் தேர்வு முடிவுகள் வெளியாகததால், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பள்ளியின் நிர்வாக குளறுபடியால், தங்களின் எதிர்காலம் பாதிக்கப்பட்டுள்ளதாக மாணவிகள் கண்ணீர் விட்டு அழுதனர்.

Advertisement