“அத்தை நான் உதவிக்கு வறேன்..” வீட்டிற்கு வந்த சிறுமி..! 16 வயது சிறுவன் செய்த விபரீதம்..!

817

அரியானா மாநிலம் குர்கான் பகுதியில் வசிப்பவர் சோனாலி ( பெயர் மாற்றப்பட்டுள்ளது. 15 வயதாகும் இவர், தனது அத்தைக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால், உதவி செய்வதற்காக அவர் வீட்டிற்கு சென்றுள்ளார்.

வீட்டில் அவருக்கு உதவிகள் செய்துக்கொண்டிருந்த நிலையில், மருத்துவமனைக்கு சிறுமியின் அத்தை சென்றிருக்கிறார். அப்போது, சிறுமியும், 16 வயது உள்ள அத்தையின் மகனும் வீட்டில் தனியாக இருந்துள்ளனர்.

வீட்டில் யாரும் இல்லாததை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட சிறுவன், சோனாலியை கட்டிலில் கட்டி வைத்து பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறான். இதையடுத்து தனது வீட்டிற்கு சென்ற சோனாலி, காலை விடிந்ததும் பள்ளிக்கு சென்றிருக்கிறார்.

அங்கு அவர் மயக்கம் போட்டதை கண்ட பள்ளி ஆசிரியர் என்ன ஆனது என்பது குறித்து சிறுமியிடம் விசாரித்துள்ளார். சோனாலியும் தனக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்து ஆசிரியரிடம் சொல்ல, அவர் சிறுமியின் தாயிடம் கூறியிருக்கிறார்.

இந்த தகவலை கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாய், காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், அந்த சிறுவனை கைது செய்தனர்.