தாயிடம் சிறிய சண்டை.. வீட்டை விட்டு வெளியேறியதால் சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்..

2182

மகாராஷ்டிரா மாநிலம் பீட் மாவட்டத்தை சேர்ந்த குடும்பத்தினருக்கு, 15 வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது. கடந்த 3 வருடங்களுக்கு முன்பு புனேவிற்கு அவர்கள் குடிபெயர்ந்துள்ளனர்.

இந்நிலையில், சம்பவத்தன்று மகளுக்கும், தாய்க்கும் சிறிய தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கோபமடைந்த சிறுமி, வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். அப்போது, அந்த வழியாக வந்த ரிக்ஷாக்கரார், அந்த சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை கொடுத்துள்ளார்.

பின்னர், பேருந்து நிலையத்தில் ஒருவரும், அதன்பிறகு, அச்சிறுமியை கடத்தி சென்ற இரண்டு பேரும் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

இதுகுறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர், காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார், ரிக்ஷா ஓட்டுநர் உட்பட இரண்டு பேரை கைது செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள இரண்டு பேரையும் தேடி வருகின்றனர்.

Advertisement