மனநலம் குன்றிய 15 வயது சிறுமி – தூய்மை பணியாளர் செய்த கொடூரம்

191

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு மேலமந்தை தெருவில் 15 வயது மனநலம் குன்றிய சிறுமி வசித்து வருகிறார்.

இதனிடையே, ஒப்பந்த தூய்மை பணியாளரான சக்திவேல் என்பவர் வத்தலகுண்டு பேரூராட்சியில் உள்ள 14வது வார்டு மேல மந்தை தெருவில், கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கிருமி நாசினி மருந்து தெளிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்.

அப்போது, சிறுமி வீட்டில் தனியாக இருப்பதை கண்டு கிருமிநாசினி மருந்து தெளிக்க சென்ற சக்திவேல் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து வத்தலகுண்டு காவல் நிலையத்தில் புகார் அளித்தததின் அடிப்படையில், சக்திவேல் மீது போக்சோ சட்டத்தின் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of