மயங்கிய 11-ம் வகுப்பு மாணவி… வெளிவந்த அதிர்ச்சி தகவல்.. கதறிய பெற்றோர்

892

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே வசித்து வந்த அபிராமி. இவர் அங்குள்ள அரசு மேல் நிலைப்பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார்.

கடந்த 23ம்-தேதி வீட்டில் விஷம் குடித்து விட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். அப்போது திடீரென மயங்கி விழுந்த மாணவியை பெற்றோர்கள் மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு மருத்துவர்கள் மாணவியை சோதித்து பார்த்த போது 6 மாத கர்ப்பிணியாக இருப்பதாக தெரிவித்தனர். இதனை கேட்ட பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர்.

மாணவியின் உயிரை காப்பாற்ற வேண்டுமெனில், அவரது வயிற்றில் உள்ள சிசுவை அகற்ற வேண்டும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

அதற்கு அந்த மாணவியின் பெற்றோரும் சம்மதம் கூறினர். இதையடுத்து அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு 6 மாத சிசு அகற்றப்பட்டது. எனினும் உடல்நிலை மோசமடைந்து மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதனால் பெற்றோர் கதறி அழுதனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of