திருச்சியில் 1,500-க்கும் மேற்பட்ட சலூன்கள் இன்று திறப்பு… கட்டணம் உயர்வு

269

சமூக விலகலைப் பின்பற்றி, தனிநபர் இடைவெளி, கிருமி நாசினி தெளிப்பு, சானிடைசர் பயன்பாடு, முகக்கவசம் அணிதல் உள்ளிட்ட வழிகாட்டுதல்களைப் பின்பற்றி சலூன்கள் திறக்கப்பட்டுள்ளன. கூடுதல் செலவாவதால் கட்டணத்தை உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக சலூன் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து முடி திருத்துவோர் நலச்சங்க திருச்சி மாவட்டச் செயலாளர் தருமலிங்கம் கூறுகையில், இரண்டு மாதம் சலூன் திறக்கப்படாமல் பெரும் அவதிப்பட்டு வந்து நிலையில், நகர்ப்புறங்களிலும் முடி திருத்தும் நிலையங்களைத் திறக்க அனுமதித்த அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

அரசின் வழிகாட்டுதல் நெறிமுறைகளைப் பின்பற்றி வேலை செய்து வருகிறோம். இதனால் கூடுதல் செலவாகிறது. ஆகையால் கட்டணத்தை உயர்த்தும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம்.

முடி திருத்தும் தொழிலாளர்களுக்கு அரசு அறிவித்த நிவாரணத்தைப் பெறும் வழிமுறை பலருக்கும் தெரியவில்லை. விரைவாக அனைவருக்கும் நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.

ஊரடங்கு காலத்தில் வாழ்வாதாரத்திற்கு வேறு வழியில்லாததால் திறக்கப்பட்ட 500 முடி திருத்தும் நிலையங்கள் சீல் வைக்கப்பட்டு, வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சீல் வைத்ததை மனிதாபிமான அடிப்படையில் நீக்கி, வழக்குகளையும் ரத்து செய்ய வேண்டும்’ என்று வலியுறுத்தியுள்ளார்.

Advertisement