கும்பகோணம் பள்ளி தீ விபத்தின் 15-வது ஆண்டு நினைவு தினம் இன்று…!

188

கடந்த 2004ஆம் ஆண்டு ஜூலை 16ஆம் தேதி கும்பகோணம் காசிராமன் தெருவில் அமைந்துள்ள கிருஷ்ணா தொடக்கப்  பள்ளியில் ஏற்பட்ட கோரத் தீ விபத்தில் 94 குழந்தைகள் உடல் கருகி உயிரிழந்தனர்.18 குழந்தைகளுக்கு தீக்காயம் ஏற்பட்டது. உலகையே உலுக்கிய இந்தக் கோர சம்பவத்தின் 15ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி விபத்து நடந்த பள்ளியின் முன்பு குழந்தைகளைப் பறிகொடுத்த பெற்றோர்களும் பொதுமக்களும் கண்ணீருடன் அஞ்சலி செலுத்தினர்.

இதுபோன்ற ஒரு துயர சம்பவம் இனியும் நடைபெறாத வகையில் ஜூலை 16ஆம் தேதியை பள்ளிக் குழந்தைகளின் பாதுகாப்பு தினமாக அரசு அறிவிக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of