நிவர் புயல்.. 16 மாவட்டங்களில் நாளை அரசு விடுமுறை..

20196

இந்த வருடம் தொடக்கத்தில் இருந்தே, பல்வேறு சோதனைகளை பொதுமக்கள் தினம்தோறும் சந்தித்து வருகின்றனர். முதலில் பெருந்தொற்று வைரஸ், தற்போது நிவர் புயல் ஏற்பட்டுள்ளது.

நாளை காலை இந்த புயல் கரையை கடக்க இருப்பதால், பெரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு எடுத்துள்ளது.

அதன் ஒரு பகுதியாக, சென்னை, வேலூர், கடலூர், விழுப்புரம், நாகை, திருவாரூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், தஞ்சை, மயிலாடுதுறை, திருவண்ணாமலை, அரியலூர், பெரம்பலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவள்ளூர் ஆகிய 16 மாவட்டங்களில் அரசு பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

அத்தியாவசிய துறைகளை தவிர, மற்ற அனைத்து அரசு துறைகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. முதலில் 13 மாவட்டங்களுக்கு மட்டும் அரசு விடுமுறை அளித்த நிலையில், தற்போது 16 ஆக மாற்றப்பட்டுள்ளது. குறிப்பிடத்தக்கது.

Advertisement