கொலை வழக்கில் 16 பேருக்கு ஆயுள் தண்டனை

188

சிவகங்கை, திருப்பாச்சேத்தி அருகே கச்சநத்தம் கிராமத்தை சேர்ந்த அல்லிமுத்து என்பவர் ஆட்டு கிடை அமைப்பதில் ஏற்பட்ட தகராறில் கடந்த 2010 ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டார்.

இது தொடர்பாக அந்த கிராமத்தை சேர்ந்த 18 பேர் கைது செய்யப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது.

அவர்களில் சேகர்  கருப்பையா இறந்து விட்டனர். இந்நிலையில் குற்றவாளிகள் 16 பேருக்கும் ஆயுள் தண்டனையும்

8 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து சிவகங்கை மாவட்ட முதன்மை நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதையடுத்து குற்றவாளிகள் அனைவரையும் போலீசார் சிறையில் அடைத்தனர்.

Advertisement