ரஜினியுடன் கே.எஸ் ரவிக்குமார் திடீர் சந்திப்பு.., காரணம்?

621

பேட்ட படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் தர்பார் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நாளை துவங்குகிறது. இதற்காக ரஜினிகாந்த் இன்று மும்பை புறப்பட்டு சென்றார்.

அவர் மும்பை புறப்படுவதற்கு முன்பாக பிரபல இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் ரஜினிகாந்த் இடையே சந்திப்பு நிகழ்ந்துள்ளது. சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினியின் வீட்டிற்கு சென்ற கே.எஸ்.ரவிக்குமார், ரஜினியுடன் ஆலோசனை நடத்தியுள்ளார்.

ஏற்கனவே கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகி இருந்த நிலையில், அடுத்த படத்தில் இருவரும் மீண்டும் இணையவிருப்பதாக கூறப்படுகிறது. கே.எஸ்.ரவிக்குமார் கடைசியாக ரஜினியை வைத்து லிங்கா என்ற படத்தை இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of