சென்னை-அயனாவரத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை 17 காமக் கொடூரன்களுக்கு குண்டர் காவல்

835

சென்னை-அயனாவரத்தில் 12 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றம்சாட்டப்பட்ட 17 காமக் கொடூரன்களை குண்டர் காவல் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார்.

அயனாவரத்தில் உள்ள அடுக்கு மாடி குடியிருப்பில் வசிக்கும் 12 வயதான சிறுயை லிப்ட் ஆபரேட்டர்கள், காவலாளிகள், பிளம்பர்கள் என மொத்தம் 24 காமக் கொடூரன்கள் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

மாற்றுத் திறனாளியான பாதிக்கப்பட்ட சிறுமி, மூத்த சகோதரியிடம் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து சொல்லி அழுது இருக்கிறார். அதன் பிறகு தான் சிறுமியின் பெற்றோருக்கு இந்த சம்பவம் தெரியவந்துள்ளது. அவர்கள் அளித்த புகாரின் பேரில் அயனாவரம் போலீசார் அதிரடி விசாரணையை தொடங்கினர்.

லிப்ட் ஆபரேட்டர்கள், காவலாளிகள், பிளம்பர்கள் என மொத்தம் 24 பேரை விசாரணை வளையத்தில் கொண்டு வந்து அவர்கள் விசாரணை மேற்கொண்டனர். அவர்களில் 17 பேரை கைது செய்த காவல்துறையினர், காமக்கொடூரன்கள் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

சிறையில் அடைத்தனர். இந்நிலையில், 12 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் குற்றம்சாட்டப்பட்ட 17 காமக் கொடூரன்களை குண்டர் காவல் தடுப்பு சட்டத்தின் கீர் சிறையில் அடைக்க மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of